உலகமெங்கும் நேற்று நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளியானது . அதே சமயத்தில் நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் வெளியாகி உள்ளது இதன் காரணமாக இரண்டு ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு கட்அவுட், பேனர்கள் வைத்து தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ரசிகர் காட்சியின் போது தமிழகமெங்கும் பல தியேட்டரில் மோதல்கள் ஏற்பட்டது. அந்த வகையில் கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள அர்ச்சனா தியேட்டரில் வரம்பை மீறி தகராறு ஈடுபட்ட ரசிகர்கள் மீது ஆர் எஸ் புரம் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *