
கோவை,
கோவையின் பிரபல எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர் முத்து சரவணக்குமாருக்கு
மருத்துவ ரத்னா விருதை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கி கௌரவித்தார்.
பிரபல டிவி சேனல் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த வகையில் வாழ்நாள் சாதனையாளர் ரத்னா விருது குமரி அனந்தன் மற்றும் சினிமா இயக்குனர் பாரதிராஜா, இசை ரத்னா மரபிசை கலைஞர் என்.மணிகண்டன், விளையாட்டு ரத்னா பேட்மிட்டன் வீரர் எஸ்.சங்கர் முத்துசாமி உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
கோவை சிங்காநல்லூர் மற்றும் சரவணம்பட்டி பகுதியில் உள்ள முத்தூஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் பிரபல எலும்பு மூட்டு சிகிச்சை நிபணருமான டாக்டர் எம். முத்து சரவணக்குமாருக்கு
மருத்துவ ரத்னா விருது வழங்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் டாக்டர் எம். முத்து சரவணக்குமாருக்கு
மருத்துவ ரத்னா தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கி கௌரவித்தார்.
முத்தூஸ் மருத்துவமனை கடந்த 12 ஆண்டுகளாக எலும்பு மூட்டு சிகிச்சையில் 5 லட்சத்திற்கும் மேலான அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை படைத்துள்ளது. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 1000 க்கும் மேற்பட்டோர் டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினரால் காப்பாற்றபட்டுள்ளனர். மேலும் 8000 திற்கும் மேற்பட்ட மூட்டு மாற்று மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு விருது வழங்கப்பட்டுள்ளது. உலகத்தர சிகிச்சை அனைத்து தட்டு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் மருத்துவ சேவை செய்து வருகிறது முத்தூஸ் மருத்துவமனை.
இந்த விருது குறித்து டாக்டர் முத்து சரவணகுமார் கூறும் போது, கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த முறையில் அவசர சிகிச்சை அளித்து வருகிறோம்.மருத்துவ சேவையை தன்னலமற்று நேரம் காலம் பாராமல் நோயாளிகளை தன் இரத்த சொந்தமாக எண்ணி சிகிச்சை அளிக்க வேண்டும்.அதேபோல மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் தனி இடம் பெற்றுள்ளோம்.ஏழை எளிய மக்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வருகிறோம். இதனை அங்கீகரிக்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ள இந்த விருது எங்களையும் எங்கள் மருத்துவ குழுவினரையும் இன்னும் ஊக்கப்படுத்தும் என்றார்.
எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறி இந்த விருதை எங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த மக்களுக்கும் அதை உருவாக்கிய இறைவனுக்கும் சமர்ப்பிக்கிறோம் என்று கூறினார்.