கோவை,

கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளர்கள் சங்கமான கோஜிம்வா சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது .கூட்டத்திற்கு சங்கத்தின் நிறுவன தலைவர் திருமலை எம். ரவி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் திருமுருகன் ,ஜி எஸ் டி அலுவலர் வெங்கடேஷ், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக மறைந்த கிரில் சக்கரவர்த்தி கேஜி ஆர் உருவப்படத்திற்கு உறுப்பினர்கள் அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கோப்மா சங்கத் தலைவர் மணிராஜுக்கு குறுந்தொழில் காவலர் விருதும், டான்மிடா தலைவர் சங்கரநாராயணனுக்கு தொழில் முனைவோர் காவலர், கௌசிகா நதி பாதுகாப்பு அமைப்பின்  பி. கே. செல்வராஜுக்கு நதிகளின் காதலர் விருதும், கொம்சியா கே.கே .ரவிக்கு சிறுதொழில் காவலர் விருதும் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் திருப்பூர் மாவட்ட கிரில் உரிமையாளர்கள் நலச்சங்கம்,ஈரோடு மாவட்ட ஸ்டீல் பேப்ரிகேஷன் உரிமையாளர்கள் சங்கம், திருச்செங்கோடு என்ஜினீயரிங் கிரில் ஒர்க் நலச்சங்க உறுப்பினர்கள் மற்றும் கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்க பொதுக்குழு உறுப்பினர்கள் 600க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர் . அனைவருக்கும் டைரி,மாத காலண்டர், பென் ஸ்டேண்ட்,பேக் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறந்த 3 கிரில் வடிவமைப்பாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் குலுக்கல் முறையில் 5 நபர்களுக்கு கிரைண்டிங்மெஷின், செல்ப்த் ரட் மெஷின்,இன்வெர்ட்டர் வெல்டிங் மெஷின் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஜி எஸ் டி பதினெட்டு சதவீதத்தை ஐந்து சதவீதமாக குறைக்க வேண்டும்.வங்கி கடன் மானியத்துடன் வழங்க வேண்டும. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கிரில் பிட்டர் ,கிரில் வெல்டர் இடங்களை அதிகப் படுத்தி பயிற்சி காலமாக மைக்ரோ நிறுவனங்களான கிரில் பேப்ரிகேட்டர்களிடம் பயிற்சி பெற அனுப்ப வேண்டும். மாதந்தோறும் அமல்படுத்தப்படும் மின்தடையை திங்கள் கிழமை மற்றும் சனிக்கிழமை நாட்களில் அமல்படுத்தாமல் செவ்வாய் முதல் வெள்ளி வரை மட்டுமே செய்ய வேண்டும்.கிரில் தொழில் முனைவோர் நலன் காக்க தொழிற் பேட்டை உருவாக்கி அதை மானியத்துடன் சுலபத் தவணையில் வழங்க வேண்டும்.கிரில் வெல்டர் என்ற பெயரில் நலவாரியம் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர்கள் செந்தில்குமார், பாலமுருகன் , செல்வம், அம்பாள் மனோகரன் ,ஏ. பி.எஸ்.பழனிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் பொள்ளாச்சி செல்வராஜ், சிறுமுகை பஞ்சு ராஜன், நகரத் தலைவர் சாதிக் பாஷா, கௌரவ தலைவர்கள் ஜனார்த்தனன்,  சுரேஷ் பாபு, கனகராஜ் ,பொதுச்செயலாளர் பெரியசாமி, இணைச் செயலாளர் வடிவேல்,பைசல் அகமது, வழக்கறிஞர் சந்தோஷ் 40க்கும் மேற்பட்ட சங்கத்தின் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *