எடப்பாடி பழனிச்சாமி 24 ஆம் தேதி கோவை வருகை

எடப்பாடி பழனிச்சாமி 24 ஆம் தேதி கோவை வருகை

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமி வருகிற 24-ந் தேதி கோவை வருகிறார். கட்சி நிர்வாகி
கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளை ஞர் அணி செயலாளர் கார்த்திகேயன் இல்ல நிகழ்ச்சி வருகிற 24-ந் தேதி கோவை சின்னி யம் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இந்த நிகழ்ச் சியில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்- அமைச்சரும், எதிர்கட்சி தலைவரு மான எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.
இதற்காக எடப்பாடி பழனிசாமி அன்றைய தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார். பின்னர் அவர், கார் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் தனியார் திருமண மண்டபத்திற்கு செல்கி றார். அங்கு அவர், நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கார் மூலம் விமானம் நிலையம் வருகி றார். அன்று இரவே விமானம் மூலம் சென் னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை வருவதை முன்னிட்டு கோவை ஓசூர் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள்
பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.