மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் 3000 மரக்கன்றுகள் நடும் விழா

மோப்பிரிபாளையம் பேரூராட்சியுடன் எல்எம்டபிள்யு நிறுவனம், உயிர் சமூக சேவை மையம் மற்றும் சோளக்காட்டு பாளையம் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய லட்சுமி வனம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார்.
அத்தப்பகவுண்டன்புதூர் இயற்கை விவசாயி தங்கவேல், மகிழ்வனம் அமைப்பின் உதயகுமார், கலங்கல் வனம் அமைப்பின் செல்வராஜ்,
கௌசிகா நதி மேம்பாட்டு சங்கம் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து ஆறு ஏக்கர் பரப்பளவில் சுமார் 30 வகையான சுமார் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.எல்எம்டபிள்யு நிறுவனத்தினர் மோப்பிரிபாளையம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், சோளக்காட்டு பாளையம் ஊர் பொதுமக்கள் , வாகை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உயிர் சமூக சேவை மையத்தின் தன்னார்வலர்கள், அத்தப்ப கவுண்டம் புதூர் மற்றும் கலங்கல் பகுதியை சார்ந்த இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட சுமார் 800 பேர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கிட்டாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், பதுவம்பள்ளி ஊராட்சி தலைவர் சரவணன், மோப்பிரிபாளையம் பேரூராட்சி துணை தலைவர் பாலசுப்பிரமணியம்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.