முகாமில் 41 ஆயிரத்து 592 பேருக்கு தடுப்பூசி

முகாமில் 41 ஆயிரத்து 592 பேருக்கு தடுப்பூசி

கோவையில் நடந்த 34வது தடுப்பூசி முகாமில், 41 ஆயிரத்து 592 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,’கோவையில், 34வது மெகா தடுப்பூசி முகாம், 1,529 இடங்களில் நடத்தப்பட்டது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஆறு மாதங்கள் நிறைவடைந்தவர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ‘பெரும்பாலான மக்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வந்தனர். இம்முகாமில், முதல் டோஸ் 15,412 பேர், 2ம் டோஸ் 7,589 பேர், பூஸ்டர் தடுப்பூசி 18,591 என, மொத்தம் 41,592 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது,’ என்றனர்.