பிரியானிக்கடை பகுதியில் கடை மூடும் நேரம் கடந்து அலைமோதிய கூட்டத்தை, தடியடி நடத்தி கூட்டத்தை களைத்த போலிசார்

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டட்டம் நள்ளிரவு முதலே ஆரம்பித்தது. இந்த நிலையிலே, கோவையில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கொண்டாட்டத்தில் ஆடி, பாடி குதூகலமான புத்தாண்டை ரசித்த பொதுமக்கள், அதன் பின்னர் ருசிக்க திட்டமிட்டு உணவங்களை முகாமிட்டனர். இரவு 1 மணிக்கு மேல் உணவு உட்கொள்ள, அசைவ உணவகங்களை பெரும்பாலானோர் தேடி சென்றனர். அதன் அடிப்படையில் கோவை கோட்டைமேடு பகுதில் பிரியானி, கிரில், சிக்கன் ரைஸ் உள்ளிட்ட அசைவ உணவுகளை உட்கொள்ள அசைவ பிரியர்கள் அலைமோதினர். இதனால் இரவில் அந்த பகுதி சாலைகள் நெரிசலாக காணப்பட்டது . காவல்துறை அனுமதித்த நேரத்தை கடந்து, 3 மணிக்கு மேல் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடைகளை மூட போலிசார் அறிவித்து வந்தனர். அப்போது அங்கிருந்த அசைவ பிரியர்கள் யாரும் கலைந்து செல்லவில்லை. இந்த நிலையிலெ, போலிசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அசைவ பிரியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். புத்தாண்டு கொண்டாட்டிவிட்டு அசைவம் ருசிக்க வந்தவர்கள் அடி வாங்கி வீடு திரும்பினர். லேசான தடியடியால் அப்பது பரபரப்பாக காணப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *