குடும்பம், குடும்பமாக குழுமி புத்தாண்டை வரவேற்ற கோவை வாசிகள் …

உலகம் முழுவதும் 2024 ஆம் ஆண்டு ஆங்கில வருட பிறப்பை பொதுமக்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். இந்த நிலையிலே கோவையில் வாலாங்குளத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் கலை கட்டியது. பொதுமக்களின் கண்களை கவரும் வகையில் லேசர் லைட்டுகள் பொருத்தப்பட்டு ஒளிர விடப்பட்டன. வானில் வண்ணங்களை தீட்டி வர்ணஜாலம் செய்த லேசர் ஷோ, அங்கிருந்த பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. அத்தோடு மட்டுமின்றி புத்தாண்டை வரவேற்கும் விதமாக ட்ரோன்கள் பறக்க விடப்பட்டு, டால்பின் உலா வருவது போன்ற காட்சிகளை வடிவமைத்து , 2024 ஆங்கில புத்தாண்டு பிறந்ததனை அறிவித்து, பொதுமக்களை குஷி படுத்தினர். வாலாங்குளத்தில் குளக்கரையில் குழுமியிருந்த பொதுமக்கள், ஹேப்பி நியூ இயர் என முழங்கி புத்தாண்டை உற்சாகமுடன் வரவேற்றனர் கடந்த ஆண்டு வெள்ளம் மற்றும் தற்பொழுது கொரோனா பரவலும் இருக்கின்ற நிலையில், நடப்பாண்டில் இவை அனைத்தும் இல்லாமல் பொதுமக்கள் நலமுடன் இருக்க வேண்டுமென பலர் தங்கள் விருப்பத்தினை தெரிவித்தனர். நாட்டின் வளர்ச்சியில், இந்த ஆண்டு பெரும் பங்காற்ற வேண்டும் என பலரும் தெரிவித்தனர். பெண்கள் ஆண்கள் என பலர், இந்த வருடம் என்ன ரெசல்யூஷன் என்பதையும், சுவாரசியுடன் தெரிவித்து புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *