
உலகம் முழுவதும் 2024ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த நிலையிலே, கோவையில் திறந்தவெளி மைதானத்தில், ஆயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள ப்ரோசோன் மால் திறந்தவெளி மைதானத்தில், பொதுமக்களை கவர்ந்த இளம் தலைமுறை பாடகர்களை வைத்து இசை கச்சேரியும், துள்ளல் நடனமாடும் நடன கலைஞர்களின் அனல் பறக்கும் ஆட்டமும் பொதுமக்களை ரசிக்க செய்தது. டி.ஜெ. இசையைக்கு இசைந்து ஆடிய பொதுமக்கள் உற்சாக வெள்ளத்தில் மூழ்கினர். பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என பலரும் குழுமி, ஆடல் பாடலை கண்டும் கேட்டும் மகிழ்ந்தனர். 2023 ஆம் ஆண்டு முடிந்து, 2024 ஆம் ஆண்டு பிறப்பதற்கான கவுண்டவுன் ஆரம்பித்தவுடன், பொதுமக்கள் தங்கள் அலைபேசியில் டார்ச் லைட் களை ஆன் செய்து, வானில் ஜொலிக்கும் நட்சத்திரங்களைப் போல, செல்போன்களை ஒளிர வைத்து, புத்தாண்டை உற்சாகமுடன் வரவேற்றனர். ஹேப்பி நியூ இயர் இசையுடன் பாடலும் ஒழிக்கப்பட்டது. அப்பொழுது அங்கிருந்த பொதுமக்கள் இசைக்கு இசைந்து புத்தாண்டை ஹேப்பி நியூ இயர் என முழங்கி வரவேற்றனர் . புத்தாண்டில் பூத்த இந்த மகிழ்ச்சி, புதிதாக பிறந்த இந்தாண்டு மட்டுமின்றி, எல்லா ஆண்டுகளிலும் பூக்க வேண்டும் எனபதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றன .