மழைக்காலங்களில் பழுதடைந்த கட்டிடம்-மரங்கள் அடியில் பொது மக்கள் நிற்க வேண்டாம்.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரை

கோவை,

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கடந்த 2நாட்களாக கோவையில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.ஆர். எஸ். புரம், பகுதியில் இன்று 2 மரங்கள் உடைந்து  விழுந்துள்ளன.அவைகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.பொதுமக்கள் மழைக்காலங்களில் பழுதடைந்த காம்பவுண்ட் சுவர், கட்டிடங்கள்,மற்றும் மரங்களுக்கு அடியில் நிற்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மழைக்காலங்களில் கோவையில் குறிப்பிட்ட சில பாலங்களுக்கு அடியில்தண்ணீர் தேங்குகிறது. இதனால் அதிக மழை பெய்யும் போது அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.அந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை வேறு வழியாக திருப்பி விடுவதற்கு போலீசார் எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள். கோவையில் அமைதி நிலவுகிறது என்பதற்காக போலீசார் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. எப்போதும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற அறிவுரையும் வழங்கபட்டுள்ளது.இவர் அவர் கூறினார்.