
கோவை ,
தென் மாநாட்டு தமிழ் விஸ்வகர்மா உறவின்முறை சங்கம், தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூகங்களின் கூட்டமைப்பின் சார்பாக விஸ்வ பிரம்ம ஜெயந்தி வழிபாடு இன்று மகாகணபதி பூஜை விஸ்வ பிரம்ம காயத்ரி தேவி யாக பூஜை நடைபெற்றது.ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் விஷ்வ பிரம்ம ஜெயந்தி விழா தமிழகம் எங்கும் விஸ்வகர்மா சமுதாய மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.விஷ்வ பிரம்ம ஜகத்குரு நிலவேம்பு சித்தர் பாபுஜி சுவாமிகள் தலைமையில் தமிழகமெங்கும் பல்வேறு மாவட்டங்களில் சமுதாய சங்கங்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றார்கள்.தொடர்ந்து பாபுஜி சுவாமிகள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் உலகைப் படைத்த பரப்பிரமத்தின் ஜெயந்தி விழா செப்டம்பர் மாதம் அக்டோபர் மாதம் முழுவதும் அனைத்து சமுதாய மக்களும் விஷ்வ பிரம்மா காயத்ரி தேவி வழிபாடு செய்தால் தொழில் சிறப்பாக இருக்கும் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும். லட்சுமி கடாட்சம் பெருகும். சகல வளமும் கிடைக்கும் என்றார். இந்த விழாவில் ஐ.எஸ். மணி, ஐ. எஸ். சீனிவாசன், தலைவர் உமா சங்கர், செயலாளர் வி கே எஸ் பாலமுருகன், பொருளாளர் பா.சு ஆறுமுகம், துணைத் தலைவர் கடம்பூர் சீனிவாசன், ரவி, வள்ளிநாயகம், சீனிவாசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மதியம் ஆயிரக்கணக்கானவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது