
கோவை,
தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில், சரவணம்பட்டியில் உள்ள மாவட்டக் கழக அலுவலகத்தில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட கழகப் பொறுப்பாளர் பையா (எ) ஆர்.கிருஷ்ணன் தலைமையில் கழக நிர்வாகிகள் – கழக உடன்பிறப்புகள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேலுசாமி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.சுரேஷ், சரவணம்பட்டி பகுதி கழகச் செயலாளர் சிவா (எ) பழனிச்சாமி, சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.பி.சுரேஷ்குமார், சாய்பாபாகாலனி பகுதி கழகச் செயலாளர் கே.எம்.ரவி, கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் வே.கதிர்வேல், இடிகரை பேரூராட்சி தலைவர் ஜெனார்த்தனன், சர்க்கார் சாமக்குளம் பேரூர் கழகச் செயலாளர் சுரேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் கந்தசாமி, சத்தியநாராயணன், கார்த்தி, நந்து (எ) விஜயகுமார், சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய பொருளாளர் வைரமுத்து, சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய மகளிர் துணைச் செயலாளர் பர்வீனா, சரவணம்பட்டி பகுதி அவைத் தலைவர் வீராசாமி, சரவணம்பட்டி பகுதி துணைச் செயலாளர்கள் சம்பத்குமார், கர்ணன், வட்ட கழகச் செயலாளர்கள் வசந்தராஜ், முத்துசாமி, ராமச்சந்திரன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ், ரேணுகோபால் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.