தந்தை பெரியாருக்கு எஸ்.பி.வேலுமணிக்கு மரியாதை

தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணி தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி காத்த காவலர் பெரியாரின் பெருமைகளை கூறும் விதமாகவும், தந்தைபெரியார், பேரறிஞர் அண்ணாவின் வழியில் உண்மையாக வீறு நடை போட்டு சமூக நீதியை நிலை நிறுத்தி தமிழகத்திற்கு நல்லாட்சி வழங்கிய முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் மீண்டும் சமூக நீதி, உண்மையான சமத்துவத்திற்கான ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலரும். அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் என முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணி தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார், கழக அமைப்பு செயலாளரும், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான எ.கே.செல்வராஜ், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் ஜெயராம், முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி ஆகியோர் உட்பட அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.