
ஓணம் பண்டிகை, நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, கேரளாவுக்கு செல்லும் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க, கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.திருவனந்தபுரம் – ஹைதராபாத் இடையே (வண்டி எண்:07120) எக்ஸ்பிரஸ் ரயில், திருவனந்தபுரத்தில் இருந்து, வரும், 10ம் தேதி இயக்கப்படும். இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக பயணிக்கும்.
யஷ்வந்த்பூர் – கொல்லம் இடையேயான(வண்டி எண்:06501) சிறப்பு ரயில், நாளை மதியம், 1:00 மணிக்கு யஷ்வந்த்பூரில் புறப்படும். மறுமார்க்கத்தில், கொல்லம் – யஷ்வந்த்பூர் இடையேயான(வண்டி எண்:06502) கொல்லத்தில் இருந்து வரும், 8ம் தேதி இரவு, 10:00 மணிக்கு புறப்படும்.இந்த ரயில்கள், கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், திருவல்லா, செங்கனுார் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரல் – எர்ணாகுளம் இடையேயான(வண்டி எண்:06053) சிறப்பு ரயில், நாளை இரவு, 11:30 மணிக்கு புறப்படும். இதேபோல், மறுமார்க்கத்தில், எர்ணாகுளம் – சென்னை சென்ட்ரல் இடையேயான(வண்டி எண்: 06054) எர்ணாகுளத்தில் இருந்து வரும், 9ம் தேதி மதியம், 2:20 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்கள், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.இதேபோல், திருநெல்வேலி – பெங்களூரு இடையேயான(வண்டி எண்: 06052) சிறப்பு ரயில், வரும், 10ம் தேதி காலை, 8:00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும். இந்த ரயில், பாலக்காடு, கோவை, சேலம் ரயில்வே ஸ்டேஷன்கள் வழியாக செல்லும்.