
சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத் தில் கடத்தி வந்த 3/2 கிலோ நகை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கேரளா வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவை விமான நிலையத்தில் இருந்து உள் நாடு மற்றும் இலங்கை, சிங்கப்பூர், சார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப் பட்டு வருகிறது. அதன்படி சார்ஜா வில் இருந்து கோவைக்கு வரும் விமானத் தில் தங்க நகை கடத்தப்படுவதாக சுங்க இலாகாத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தக வல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று காலை சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் பய ணித்த பயணிகளிடம் சுங்க இலாகாத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அதில் ஒரு நபரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந் தேகம் ஏற்பட்டது. உடனே அந்த நபரை அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.
அப்போது அவர் அணிந்து இருந்த பெல்ட், கைச்செயின், கழுத்தில் போட்டு இருந்த செயின் ஆகியவற்றில் ஏராளமான தங்க நகையை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 3 1/2 கிலோ தங்க நகையை அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 80 லட்சத்துக்கும் மேல் இருக் கும் என்று கூறப்படுகிறது.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பெரோஸ் ரகுமான் (30) என் பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் இந்த கடத்தலில் மொத்தம் 7 பேருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதைய டுத்து அதிகாரிகள் பெரோஸ் ரகுமானை கைது செய்தனர். அவருடன் தொடர்புடைய நபர்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசா ரணை நடத்தி வருகிறார்கள்.