கோவை மாவட்ட வர்த்தக சங்க சின்னியம்பாளையம் கிளை கூட்டம்

கோவை மாவட்ட வர்த்தக சங்க சின்னியம்பாளையம் கிளை ஆலோசனை கூட்டம் நேற்று கிளைத் தலைவர் சுடலைமணி தலைமையில் நடைபெற்றது . கூட்டத்தில் தலைமை கமிட்டி சார்பாக தலைமை தலைவர் முத்துப்பாண்டி ,வெளியுறவுத் துறை தலைவர் செல்வின் ராஜன், செய்தித்தொடர்பாளர் தனிஷ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர் . கூட்டத்தில் குரும்பபாளையம் கிளை தலைவர் வினித் ராஜ் மற்றும் பொருளாளர் , இருகூர் கிளை தலைவர் ஆறுச்சாமி, செயலாளர் தங்கராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் . கூட்டத்தில் அதிக உறுப்பினர்கள் சேர்ப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது . கூட்டத்தில் சின்னியம்பாளையம் கிளைச் செயலாளர் முத்து, பொருளாளர் ரமேஷ், அலுவலகப் பொறுப்பாளர் ஜெபராஜ் , துணைத்தலைவர் முருகன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *