கோவை உக்கடத்தில் உள்ள பெரிய குளத்தில் படகு சவாரியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
மூன்று நாட்கள் கொங்கு மண்டலத்தில் பயணம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் கோவையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். அதில் கோவை மாநகராட்சி சார்ந்த 57 கோடி ரூபாய் மதிப்பிலான பணி முடிந்த திட்டங்களை துவக்கி வைக்கிறார். மேலும் உக்கடம் பெரிய குளத்தில் புதிதாக தனியார் பங்களிப்புடன் துவக்கப்பட உள்ள படகு சவாரியையும் அவர் துவக்கி வைக்கிறார் . மேலும் 134 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார்.


