வீட்டின் கதவை உடைத்து 35 பவுன் நகை 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

கோவை சக்தி ரோடு குரும்பபாளையம் கிரவுண்ட் சிட்டி பகுதியில் பழனிச்சாமி என்பவரது மனைவி மலர்விழி (56) இவரது கணவர் பழனிசாமி இறந்த நிலையில் அவரது மகள் சங்கமித்ரா (30) அவரது கணவர் நந்தகுமார் மற்றும் குழந்தை ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு அருகே மகளையும் மருமகனையும் தனிக்குடித்தனம் குடியமர்த்திய நிலையில் தினமும் காலையில் தனது பேரக்குழந்தையை பார்த்து வர மலர்விழி சென்று வருவது வழக்கம். கடந்த இரு தினங்களுக்கு முன்பு வழக்கம் போல் தனது பேரக்குழந்தையை பார்த்து வர தனது மகள் வீட்டுக்கு சென்ற மலர்விழி கடந்த இரண்டு நாட்களாக அங்கே தங்கினார். நேற்று மாலையில் தனது வீட்டிற்கு வந்த மலர்விழி வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்த போது வீட்டின் உள் அறையில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 35 பவுன் தங்கச் செயின், மோதிரம், உள்ளிட்ட தங்க நகைகளும் சுமார் 15 கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு கோவில் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து அருகில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் கைரேகை பதிவுகளை கைப்பற்றினர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.