கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை சுந்தராபுரம் எம்ஜிஆர் நகரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மேற்கு மாவட்ட இளைஞரணி மற்றும் தி ஐ பவுண்டேஷன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினர். இதில் பிரத்யேக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கொண்டு கண் பரிசோதனைக்காக வந்திருந்த முதியோர்களிடம் அவர்களின் பிரச்சனை குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு மருந்து உள்ளிட்டவை குறித்தும் அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் மயில்சாமி ,மண்டல ஊடக பிரிவு செயலாளர் ரம்யா வேணுகோபால், மண்டல செயலாளர் ரங்கநாதன்், மேற்கு மாவட்ட செயலாளர் சிட்கோ சிவா,மாவட்ட துனை செயலாளர் மோகன்ராஜ்,மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வா,மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரமேஷ் மற்றும் வார்டு செயலாளர்கள், நகர செயலாளர்கள்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
%d bloggers like this: