பெண்ணிடம் செயின் பறிப்பு

கோவை பிஎன் புதூர் கோகுலம் காலனி பகுதியில் சேர்ந்தவர் மகேஸ்வரன் என்பவரின் மனைவி வானதி (54). இவர் நேற்று மாலை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் துணி வாங்குவதற்காக தனது காரில் சென்றார். துணிகளை வாங்கிக்கொண்டு மீண்டும் தனது காருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். தற்போது அப்போது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் வானதி கழுத்தில் அணிந்து இருந்த இரண்டரை பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து வானதி ஆர் எஸ் புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *