வழிப்பறி செய்ய திட்டமிட்ட மூவர் கைது

கோவை செல்வபுரம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் .அப்போது சுண்டக்காமுத்தூர் ரோடு பகுதியில் இருட்டான பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனே அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் கத்தி வைத்திருந்தது தெரியவந்தது. அது குறித்து போலீசார் விசாரித்த போது வழிப்பறி செய்வதற்காக கத்தியுடன் இருட்டில் மறைந்து நின்றதாக அவர்கள் தெரிவித்தனர். போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை நடத்திய விசாரணை நடத்தியதில் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் உமர் பாரூக் (22), கரும்புக்கடை ஆசாத் நகர் பகுதியில் சேர்ந்த அப்துல் காதர் என்பவரின் மகன் ஆஷிக் (22), கரும்புக்கடை சாரமேடு பகுதியைச் சேர்ந்த ஹக்கிம் என்பவரின் மகன் அணிஸ் ரஹ்மான் (20 )என்பது தெரிய வந்தது .தொடர்ந்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *