கோவை கூடலுர் கவுண்டம்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் சங்கர் (31).
டிரைவரான இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 3
குழந்தைகள் உள்ளனர்.
சங்கருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு
இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு
ஏற்பட்டது. இதில் அவரது மனைவி கோபித்து கொண்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு
சென்றார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து தூங்க
சென்றார். மறுநாள் காலை அவர் எழுந்திருக்கவில்லை. அவரது வீட்டுக்கு சென்ற அவரது நண்பர் பார்த்தபோது ஷங்கர் இறந்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து
பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
%d bloggers like this: