கோவை துடியலூரை அடுத்த ரங்கம்மாள் காலனி முருகன் நகரை சேர்ந்தவர் அஜித்குமார் (26). கூலி தொழிலாளியான் இவர் கடந்த 5 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் அவரை
காதலித்து வந்தார். அஜித் குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.
இதனால் அந்த பெண்ணுக்கு அஜித்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித்குமார் தான் காதலித்து வந்த பெண்ணிடம் திருமணம் செய்து
கொள்வது பற்றி பேசியதாக தெரிகிறது. அப்போது அந்த பெண் அஜித்குமாருக்கு
குடிப்பழக்கம் இருந்ததால் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்தார்.
அவர் அந்த பெண்ணை சமாதானம் செய்தும் அவர் மறுப்பு தெரிவித்ததாக
தெரிகிறது. இதனால் அஜித்குமார் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து
வந்தார். இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார்
சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி
வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
%d bloggers like this: