நாளை உக்கடம் பகுதியில்
போக்குவரத்து மாற்றம்

கோவை உக்கடம் ஆத்துப்பாலம்
மேம்பாலப்பணிகளின் காரணமாக உக்கடம் துணை மின்நிலையத்தின் இருந்து உக்கடம் பேருந்து நிலையம் சந்திப்பு வரை 110 கிலோ வோல்ட் உயர்மின் அழுத்த மின்கம்பிகள் மாற்றி அமைக்கும் பணி நாளை சனிக்கிழமை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக உக்கடம் முதல் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலை செல்லும் வாகனங்கள் மற்றும் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் செல்லும் வாகனங்கள் புட்டுவிக்கி, சுண்ணாம்பு களவாய் பேரூர் புறவழிச்சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அது போன்று திருச்சி சாலையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வாகனங்கள் வின்செண்ட் ரோடு வழியாக பஸ் நிலையம் சென்று அடைந்து புட்டுவிக்கி சாலை வழியாக பொள்ளாச்சி செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.