
கோவை,
கோவை மதுக்கரை தாலுக்கா அரிசி பாளையம் ஊராட்சி வழுக்குபாறை புதூர் முத்து அவென்யூவை சேர்ந்த பொதுமக்கள் கடந்த செப்டம்பர் மாதம் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில் வழுக்குப்பாறையில் இருந்து மாம்பள்ளி செல்லும் சாலையில் இதன் இணைப்பு சாலையான வழுக்குபாறை புதூர் சாலையில் எங்கள் நகரின் பிரதான சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் மாணவ மாணவிகள் பள்ளிக்கும், பொதுமக்கள் மருத்துவமனை செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.மேலும் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து தார் சாலை அமைக்கும் பணி
மதுக்கரை ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம் நிதியிலிருந்து நிதி ஒதுக்கி முத்து அவென்யூவில் தார் சாலைக்கு பூமி பூஜையை அரிசிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம் ஆகியோர்
துவக்கி வைத்தனர்.சாலை அமைக்கும் பணியை துவக்கியதற்காக வழக்கறிஞர் அரவிந்த் ராஜா மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நன்றி தெரிவித்தனர்.