கோவை,
கோவை மாவட்ட வர்த்தக சங்கம்
சிங்காநல்லூரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு கிளைகள் உள்ளது. கோவை ஒண்டிப்புதூர் கிளை தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒண்டிப்புதூர் கிளை தலைவர் ஜே.எம்.எஸ்.மனோகர் தலைமை வகித்தார். தலைமை பொதுச் செயலாளர் டி.ராஜன், பொருளாளர் டி.சாமுவேல் ராஜ், அவைத்தலைவர் என்.தேவராஜ், கிளை அவைத்தலைவர் டி.தேவராஜ், கிழக்கு மாவட்ட செயலாளர் நாராயணன், மேற்கு மாவட்ட செயலாளர் மார்ட்டின், கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . ஒண்டி புதூர் கிளைச் செயலாளர் ஏ.அகஸ்டின் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியை தலைமை செய்தி தொடர்பாளர் ஏ.தனிஷ் தொகுத்து வழங்கினார் .கோவை மாவட்ட வர்த்தக சங்கத் தலைமை தலைவர் டி.முத்துப்பாண்டி குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றினார். சங்க கொடியை தலைமை துணைத்தலைவர் காயத்ரி வி.காளிதாஸ் ஏற்றி உரையாற்றினார். கிளை அலுவலகத்தை வர்த்தக சங்க கௌரவ ஆலோசகர் ஆர்.ரவிகிருஷ்ணன் திறந்து வைத்தார். கிளை நிர்வாகிகளை சங்க சட்ட ஆலோசகர் விஜய் ஆனந்த ஜெயராஜ் அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக எல்.ஜி.மல்டி ஸ்பெஷாலிட்டி மெடிக்கல் சென்டர் மேனேஜிங் டைரக்டர் டாக்டர் எம்.வி.கோபிநாத், மீனா பர்னிச்சர் அதிபர் ஆர்.ஈஸ்வரமூர்த்திஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சிக்னல் இல்லாத போக்குவரத்தை மாற்றி அமைத்த மாநகர போலீஸ் கமிஷனருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது…
விழாவில் தலைமை கமிட்டி துணை செயலாளர்கள் நாராயணன், என்.செல்வன், கௌரவ ஆலோசகர்கள் எஸ்.எஸ்.லட்சுமணன், ஏ.சேர்மதுரை, பகுதி நிர்வாகிகள் வரதராஜபுரம் நடராஜன், வசந்தாமில் தனசிங், சித்திர குமார், தலைமை செயற்குழு நிர்வாகிகள் பழனிச்சாமி, தங்கராஜ், கார்த்திகேயன், ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.