
கோவை,
கோவை தலைமை அஞ்சலகத்தில் புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து
அஞ்சல் கூட்டு போராட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.போராட்ட குழு நிர்வாகிகள் ரமேஷ்குமார், சிவராஜ், பழனிச்சாமி, சிவா, தனபாலன், பெருமாள்சாமி தலைமை தாங்கினார்கள்.போராட்டத்தை கோட்ட செயலர்கள் சிவசண்முகம், செந்தில்குமார், சிவபாரதி, பாலமுருகன், ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.ஆர்பாட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தின் பாதிப்புகளை குறிப்பாக அஞ்சல்துறையில் பணி ஒய்வுபெறுபவர்கள் பெறும் பென்சன் தொகை ரூ.1000 அதற்கு குறைவான பெரும் நிலை உள்ளது. இந்த பென்சன் தொகை கொண்டு தனிமனித அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. புதிய பென்சன் தொகையின் பாதிப்பு அஞ்சல்துறையில் அதிகமாகவே உள்ளது. அஞ்சல்துறையில்தான் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பதவி உயர்வு பெற்று பணி ஒய்வுபெறும்போது பென்சன் தொகை மிக குறைவாக கிடைத்து வருகிறது. கோரிக்கையின் முக்கிய அம்சமாக பென்சன் கணக்கீட்டுக்கு கிராமபுற ஊழியர் சர்வீஸ்
ஸை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.போராட்டதில் கருணாநிதி, சுப்பிரமணியம், வெங்கட்ராமன், ஆகியோர் பேசினர். முடிவில் கோட்ட பொருளாளர் நாகராஜ் நன்றி கூறினார். ஆர்பாட்டத்தின் கோட்ட உதவி செயலர் ஜீவா விண்ணதிர கோரிக்கை விளக்கி கோஷமிட்டார்.ஆர்ப்பாட்டத்தில் கோட்டம் முழுவதிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.