
கோவை: கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனின் மகன் கோபால கிருஷ்ணன் சிகிச்சை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
கோவை வடக்கு தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் அம்மன் அர்ஜூனன். இவரது மகன் கோபாலகிருஷ்ணன். கோவை மாவட்ட அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளராகவும் கோபாலகிருஷ்ணன் இருந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கோபாலகிருஷ்ணன் இன்று காலை மரணம் அடைந்தார். அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனனின் மகனான கோபாலகிருஷ்ணனின் மகனின் திடீர் மரணம் அதிமுகவினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.