
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ளது வசந்த் அண்ட் கோ. இந்த கடையில் டிவி பிரிட்ஜ் வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர் .இந்த நிலையில் இந்த கடை மேல் தளத்தில் அட்டைப்பெட்டிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு பொருத்தப்பட்டிருந்த ஏசி இருந்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. கடையில் உள்ள நிர்வாகிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் . உடனடியாக மத்திய தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.