தமிழ்நாடு ஸ்ட்ரக்ச்சுரல் இன்ஜினியர் சங்க  கருத்தரங்கம் 

கோவை,

தமிழ்நாடு கட்டமைப்பு பொறியாளர் சங்க கோவை மையம் சார்பில், கோ இண்டியா வளாகத்தில் கருத்தரங்கு நடந்தது.

கோவை மைய தலைவர் பொறியாளர் கணேஷ் தலைமை வகித்து பேசும் போது, சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டடம் இடிந்த நிகழ்வுக்கு பின், ஸ்ட்ரக்ச்சுரல் இன்ஜினியர்களின் முக்கியத்துவம் வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது. தற்போது தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட சட்டம் 2019ன் படி உள்ளூர் திட்டக் குழுமத்தில், கிரேடு 1, கிரேடு 2 கட்டமைப்பு பொறியாளர்கள் என பதிவு செய்தவர்களே தகுதியானவர்கள்.அவர்களே கட்டட ஸ்டரக்சுரல் டிசைன் செய்யவும், நிறைவுச் சான்றிதல், கட்டட அனுமதி ஆகியவற்றில் கையெழுத்திட்டு பணிகளை மேற்பார்வை செய்ய தேவைப்படுகிறது. இது வரவேற்கத்தக்க மாற்றம். கட்டடம் கட்டும் பொதுமக்கள்‌தகுதி பெற்ற பொறியாளர்களை பணியமர்த்தினால் ம்டடுமே இனி பணிநிறைவு சான்றிதழ் பெற முடியும். கட்டமைப்பு பொறியாளர்கள் மேற்பார்வையின்றி கையெழுத்திடுவதை தவிர்க்கவும். அரசு பணி வடிவமைப்புகளில் ஆலோசனை வழங்க கட்டமைப்பு சங்கம் என்றும் தயாராக உள்ளது.

கோவை வெகுவேகமாக உள்கட்டமைப்பில் வளரும் நிலையில், நகரின் வளர்ச்சிக்கு உதவ பதிவு பெற்ற கட்டமைப்பு பொறியாளர்கள் உறுதியேற்போம், என்றார்.

இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர் கார்த்திகேயன் உயரமான கட்டடங்கள் கட்டும் பொழுது கவனிக்க வேண்டிய வடிவமைப்பு அடிப்படைகள் பற்றிய கருத்தரங்கம் நடத்தினார், மாநில பட்டய தலைவர் கோபிநாத், சேலம் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் கல்யாணசுந்தரம், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் பெருமாள், கட்டமைப்பு நிபுணர் வெங்கட சுப்பிரமணியன்,

உட்பட பலர் கலந்து கொண்டனர்.