ஸ்ரீ வித்யா பீடம் அறக்கட்டளையின் 3ஆம் ஆண்டு விழா

கோவை,

ஸ்ரீ வித்யா பீடம் அறக்கட்டளை 3 ஆம்  ஆண்டு விழா  கணபதி மெக்காரியா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு  அமைப்பின் தலைவர்  மாயாதேவி சங்கர் தலைமை தாங்கினார். பொருளாளர்  ஹரிஹரன் வரவேற்புரையாற்றினார்.விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற கல்லுாரி பேராசிரியர் மூர்த்தி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை சார்பில் நடததப்பட்ட மாண்டிச்சேரி ஆசிரியர் பயிற்சியில் முதல் இடங்களில் தேர்ச்சி பெற்ற வைஷ்ணவி, சித்ராதேவி, பால நந்தினி, காவியா, லதா மகேஸ்வரி மற்றும் பியூலா ஆகிய மாணவிகளுக்கு பரிசு வழங்கபட்டது.

தொடர்ந்து ஏழை மாணவர் பத்துபேருக்கு கல்விக் கட்டணம் வழங்கப்பட்டது. மிகவும் ஏழையான

ஐந்து நோயாளிகளுக்கு மருத்துவ உதவி தொகை வழங்கப்பட்டது.

மேலும் 100 பேருக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில்  மாதந்தோறும் பல அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் பொருளாதாரம், மருத்துவம் மற்றும் ஆடைகள் வழங்கி உதவி செய்து வருகிறது. பல மாணவர்களுக்கு கல்வி கட்டணம் தந்து உதவி வருகிறது. இதுபோன்ற சேவைகளுக்கு மூர்த்தி  நிர்வாகிகளை பாராட்டி பேசினார்கள். பிறகு செயலாளர் பினுகோபால் நன்றியுரையாற்றினார். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.