
கோவை,
தமிழக அரசு பள்ளி பாடத்திட்டத்தில் வள்ளலார் இயற்றிய திருவருட்பாவை சேர்க்க வேண்டும் என பரம்பொருள் அறக்கட்டளை சார்பில் பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகாவிஷ்ணு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ராமலிங்க அடிகளாரின் பிறந்தநாளை தனிப்பெருங்கருணை நாளாக அறிவித்தும் தேர்தல் அறிக்கையின் போது 419 ஆவது அறிக்கையாக குறிப்பிட்டிருந்த சுத்த சன்மார்க்க போதனைகளை போற்றக்கூடிய வகையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் எனவும் அறிவித்து கௌரவித்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் வள்ளலார் இயற்றிய திருவருட்பாவை தமிழக பள்ளி பாடத்திட்டத்திலும் சேர்க்க வேண்டும். ஜாதி மத இன மொழி வேறுபாடு இல்லாமல் அனைத்து உயிர்களுக்கும் உணவு அளித்தல் வேண்டும் .அனைத்து உயிர்களையும் கருணையோடு அணுகி வாழ்வளிக்க வேண்டும் என பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய திருவருட்பா நூலை தமிழக அரசின் பள்ளி கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்த்து குழந்தைகள் அன்பிலும் அன்பிலும் அறிவிலும் சிறந்து விளங்க வழிவகை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.