
கோவை
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவ மனையில் உலக இருதய தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எம்.முத்து சரவணகுமார் தலைமை வகித்தார். இணை நிர்வாக இயக்குனர் எம். செல்வகுமார் முன்னிலை வகித்து முதன்மை உரை நிகழ்த்தினார். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஏ.எஸ்.பிரேமா வாழ்த்துரை வழங்கினார். மருத்துவமனையின் இருதயவியல் நிபுணர் டாக்டர் கே. எஸ்். சுசீந்த் கண்ணா கருத்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக டாக்டர் டி .ஆர். நந்தகுமார் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.

தொடர்ந்து மருத்துவமனையின் இருதயவியல் நிபுணர் டாக்டர் கே. எஸ்். சுசீந்த் கண்ணா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவர்,
செப்டம்பர் 29ஆம் தேதி உலக இருதய தினம் கொண்டாடப்படுகிறது .இதன் நோக்கம் பொதுமக்களிடையே இருதயத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான். ஹார்ட் அட்டாக் வருவதற்கான அறிகுறிகள் என்ன? வந்தால் என்ன செய்ய வேண்டும் போன்ற விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம். சமீப காலமாக ஹார்ட் அட்டாக் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல இளம் வயதினருக்கும் அதிக அளவில் ஹார்ட் அட்டாக் வருகிறது .இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் ஆகும். உடலில் சர்க்கரை அளவு கொலஸ்ட்ரால் பிரஷர் ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் கண்டிப்பாக வாக்கிங் செல்ல வேண்டும். மேலும் தற்போது சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனையில் இருதய பரிசோதனை முகாம் குறைந்த கட்டணத்தில் செய்யப்பட்டு வருகிறது. இதில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு இருதய பிரச்சனைகள் இருக்கிறதா அல்லது வரக்கூடிய வாய்ப்பு உள்ளதா என்பதை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்றார்.

நிகழ்ச்சியை பேராசிரியர் மூர்த்தி தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.