டாக்டர் முத்தூஸ் மருத்துவ மனையில் உலக இருதய தினவிழா
கோவை
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவ மனையில் உலக இருதய தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எம்.முத்து சரவணகுமார் தலைமை வகித்தார். இணை நிர்வாக இயக்குனர் எம். செல்வகுமார் முன்னிலை வகித்து முதன்மை உரை நிகழ்த்தினார். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஏ .எஸ் .பிரேமா வாழ்த்துரை வழங்கினார். மருத்துவமனையில் இருதயவியல் நிபுணர் டாக்டர் கே எஸ் சுசீந்த் கண்ணா கருத்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக டாக்டர் டி ஆர் நந்தகுமார் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார் நிகழ்ச்சியில் பேராசிரியர் மூர்த்தி தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.