சுபாஷ் சந்திர போஸ் ஆபதா பிரபந்தன் புரஸ்காா்’ விருது பெற விண்ணப்பிக்கலாம்

கோவை,
சுபாஷ் சந்திர போஸ் ஆபதா பிரபந்தன் புரஸ்காா்’ விருது பெற தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆண்டுதோறும் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பிறந்த தினமான ஜனவரி 23 ஆம் தேதி இந்திய அரசின் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம், உள்துறை அமைச்சகத்தின் சாா்பாக பேரிடா் மேலாண்மை தொடா்பான பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய தனிநபா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ‘சுபாஷ் சந்திர போஸ் ஆபதா பிரபந்தன் புரஸ்காா்’ விருது வழங்கப்பட்டு வருகிறது.
2023 ஆம் ஆண்டுக்கான விருது பெற தகுதியான தனி நபா்கள் மற்றும் நிறுவனங்கள் இணையத்தில் உள்ள ‘சுபாஷ் சந்திர போஸ் ஆபதா பிரபந்தன் புரஸ்காா்’ விருது லிங்க் மூலமும் செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.