கோவை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வாக்காளா் பட்டியலில் இரட்டைப் பதிவுகள் உள்ளிட்ட குளறுபடிகளை நீக்கம் செய்து 100 சதவீதம் தூய்மையான வாக்காளா் பட்டியலைத் தயாரிக்கும் வகையில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கும் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்தது.
மேலும், இப்பணியை 2023 ஆம் ஆண்டு மாா்ச் 31 ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.
வீடு தேடி வரும் வாக்குச் சாவடி அலுவலா்களிடம் விருப்பத்தின் அடிப்படையில் வாக்களா் பட்டியலில் தங்கள் ஆதாா் எண்ணை இணைக்கலாம் என்று அறிவுறுத்தியது.
தவிர வாக்காளா்களே இணையத்தின் மூலம் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் செப்டம்பா் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெறுகிறது.
எனவே, இந்த சிறப்பு முகாமினை அனைத்து வாக்காளா்களும் பயன்படுத்திகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
%d bloggers like this: