பார்க்கவகுல சங்க நிர்வாகிகள் கூட்டம்

கோவை,

கோவை மாவட்ட பார்க்கவகுல சங்க நிர்வாகிகள் கூட்டம்  காந்திபுரம், டாடாபாத்தில் அமைந்துள்ள கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் நலச்சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைவர் ஜி.தெட்சணாமூர்த்தி  தலைமை வகித்தார்.  செயலாளர் 

எஸ். தனசேகர் வரவேற்க பொருளாளர் சிவக்குமார்  நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் தேர்தல் விரைவில் நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளதால் அடுத்த கூட்டத்தை 25 ஆம் தேதி அவசரமாக நடத்த வேண்டும்.புதிய உறுப்பினர் சேர்க்கை விரைவு படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல 

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில்  20 க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அமைப்பாளர் 

 ராஜேந்திரன் நன்றியுரை கூறினார்.