கோவை,

கோவை கோவையில் பெண் விவகாரத்தில் அழகுநிலைய ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்டார். 

ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்தவர் பிரபு (39). இவர், கோவை சரவணம்பட்டி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள அழகு நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் 4 வருடங்களுக்கு முன்பு சாந்தி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். மாதம் 2 முறை ஈரோடு சென்று மனைவியை பார்த்து விட்டு வருவது வழக்கம். இவர், கடந்த மாதம் தனது மனைவியை பார்ப்ப தற்காக ஈரோட்டுக்கு சென்று விட்டு கோவை வந்து வேலை பார்த்து வந்தார். மாயமானதாக வழக்கு அவர், கடந்த 14-ந் தேதி சரவணம்பட்டியில் உள்ள தனது அறையில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி சாந்தி காட்டூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பிரபுவை தேடி வந்தனர். இந்த நிலையில் வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு ஆணின் இடது கை கிடந்தது. விரல் ரேகையை ஆய்வு செய்த போது அது காணாமல் போன அழகு நிலைய ஊழியர் பிரபுவின் கைரேகையுடன் ஒத்துபோனது. இதைத்தொடர்ந்து பிரபு வசித்து வந்த இடம் மற்றும் சில இடங்க ளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீ சார் ஆய்வு செய்தனர். இதில், சின்னவேடப்பட்டியில் இருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் பிரபு பைக்கில்  செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. பிரபு, வேலை பார்த்த அழகு நிலையத்துக்கு அடிக்கடி சில பெண்கள் வந்து சென்றனர். அதில் 6 பெண்களுடன் அவர் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அழகு நிலையத்துக்கு வரும் பெண்களிடம் அவர் மிகவும் நெருக்கி பழகியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர், பெண்களிடம் அதிக நேரம் செல்போனில் பேசி வந்துள்ளார். எனவே பெண் விவகாரம் காரணமாக பிரபுவை மர்ம நபர்கள் கடத்தி சென்று மதுவாங்கி கொடுத்து வெட்டி கொலை செய்து இருக்கலாம் என்றும், மேலும் ஆத்திரம் அடங்காமல் அவரின் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி ஒவ்வொரு பகுதியிலும் வீசி சென்று இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகத்தில் விசாரணை நடத்தி வந்தனர் . கை மட்டும் கிடைத்த நிலையில் மற்ற உடல் உறுப்புகள் எங்கெங்கு வீசப்பட்டு உள்ளது என்று பெரியநாயக்கன் பாளையம் போலீஸ் டிஎஸ்பி  நமச்சிவாயம் தலைமையில் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர் . இந்நிலையில்  கோவை துடியலூர் அடுத்துள்ள வெள்ளக்கிணர் பிரிவு வி.கே.எல் நகர் பகுதியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வாகனம் மூலம் குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்தனர் . 

அப்போது அங்கிருந்த கிணற்றில் கிடந்த  பிளாஸ்டிக் பையில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் இரண்டு துண்டுகளான ஆணின் கை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் உடனடியாக துடியலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாத், பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், துடியலூர் போலீச இன்ஸ்பெக்டர்  ஞானசேகரன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்றனர். தீயணைப்புத் துறையினர் உதவியுடன் நீல கலர் பிளாஸ்டிக் பையில் சுற்றி வீசப்பட்டு இருந்த உடல் பாகங்களை  மீட்டனர்.

மேற்கொண்டு விசாரணை செய்ய கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து போலீசார் அக்கம் பக்கத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு வெட்டப்பட்ட கை கிடைத்த நிலையில் இன்று உடலின் பாகங்கள் கிடைத்துள்ளது. மேலும் வெட்டி கொலை செய்யப்பட்ட வாலிபரின் தலை இன்னும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர் .மேலும் தலை அதே  கிணற்றில் மூழ்கியுள்ளதா என்றும் தீயணைப்புத் துறை யினர்  தீவிரமாக தேடி வருகின்றனர்.