
கோவை மாவட்ட பார்கவகுல சங்க நிர்வாகிகள் திருமலை எம். ரவி, இளைஞர் அணி நிர்வாகி வைத்தீஸ்வரன் ,சுதீப் ,ஸ்டாலின் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்தநாள் விழாவில் தமிழக பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பேசினார். அப்போது திருக்குறளை மேற்கோள் காட்டி எங்களது பார்க்கவ குல உடையார் இனத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி உள்ளார். உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட எங்களது சமுதாயத்தை இழிவு படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது .பாடநூல் கழக தலைவராக இருப்பவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர். ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அவர் இப்படி பேசி இருப்பது எங்கள் சமுதாய மக்கள் மனதை காயப்படுத்தி இருக்கிறது. எனவே தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு திண்டுக்கல் லியோனியை பாடநூல் கழக பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்.ஊடகம் வாயிலாக திண்டுக்கல் லியோனி மணிப்பு கேட்க வேண்டும். மேலும் எங்களது அமைப்பு சார்பில் வழக்கு தொடர இருக்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.