
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறி இருப்பதாவது:
கோவை நகர ஊர்க்காவல் படையில் சேர்ந்து காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் உள்ள ஆண்கள், பெண்கள், 3-ம் பாலினத்தவர்கள் கோவை காந்திபுரம் காட்டூர் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப் பங்களை பெற்றுக்கொள்ளலாம். தேவையான தகுதிகள் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயது நிரம்பாதரவராகவும் இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி. கோவை நகர எல்லைப்பகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். சேவை செய்யும் மனப்பான்மை கொண்டவராகவும், உடல் தகுதி உள்ள ராகவும் இருக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் பணிபுரிபவர்களும், சுய தொழில் செய்பவர்களும் சேரலாம்.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், முகவரி சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவை அவசியம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.