
கோவை மத்திய சிறையில் ஆயிரக்கணக்கான தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு கோவை போத்தனூர் சுவாமி விவேகானந்தர் நகர் பகுதியில் சேர்ந்த அவிநாசி கவுண்டர் என்பவரின் மகன் சாமியப்பன் (77 )என்பவர் தண்டனை கைதியாக கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து சிறைச்சாலையில் உள்ள டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சிறைகைதிகள் பிரிவுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சாமியப்பன் நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோவை மத்திய சிறைச்சாலை ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார் .புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.