
கோவை மாச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் என் மகன் கார்த்தி (24 ).கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார் .அப்போது அவரது உறவினரான கௌதம் என்பவர் எதிரே நடந்து வந்து கொண்டிருந்தார் .அப்போது கார்த்தியிடம் கௌதம் 100 ரூபாய் பணம் வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது கார்த்தி தன்னிடம் 40 ரூபாய் மட்டும் தான் இருப்பதாக கூறியிருக்கிறார் .ஆனால் கௌதம் தனக்கு நூறு ரூபாய் வேண்டுமென மீண்டும் கேட்டுள்ளார். கார்த்தி பணம் தர மறுத்துள்ளார். அப்போது கெளதம் தனது உறவினர கார்த்தி சட்டை பையில் இருந்து பணத்தை எடுக்க முயன்றார். அப்போது கார்த்தி தடுக்கவே ஆத்திரம் அடைந்த கௌதம் தகாத வார்த்தைகள் பேசியதோடு கார்த்தியை சரமாரியாக தாக்கினார். மேலும் கீழே கிடந்த டைல்ஸை எடுத்து கார்த்தி கை மற்றும் தலையில் தாக்கினார்.இதில் கார்த்திக்கு அடிபட்டு ரத்தம் வழிந்து ஓடியது. பின்னர் கௌதம் அங்கிருந்து தப்பி சென்றார். அருகில் உள்ளவர்கள் கார்த்தியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் கார்த்திக் குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் அடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கௌதமை தேடி வருகின்றனர்.