
கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் அவர்களின் மகன் கோபி விக்னேஷ்( 21). கார் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர் தீபக் உடன் கரும்பு ஆராய்ச்சி மைய சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் அங்கு வந்தார். தினேஷ் ஏற்கனவே கோபி விக்னேஷுக்கு அறிமுகமானவர். இதை அடுத்து தினேஷ் அவர்களிடம் பேச ஆரம்பித்தார் .பிறகு தகராறு செய்ய . தொடங்கினார் .தகராறு முற்றிய நிலையில் தினேஷ் மற்றும் அவருடன் வந்திருந்தவர்கள் கோபி விக்னேஷ் மீது சரமாரியாக தாக்க தொடங்கினர். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த கோபி விக்னேசின் நண்பர் அருண்குமார் என்பவர் சண்டையை விலக்கி விட முயன்றார். அப்போது தினேஷ் கீழே கிடந்த கல்லை எடுத்து தாக்கியதில் கோபி விக்னேஷுக்கும் அவரது நண்பர் அருண்குமாருக்கும் தலையில் பலத்த காயின் ஏற்பட்டது. பிறகு அங்கிருந்து தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தப்பிச் சென்றனர் .காயமடைந்த கோபி விக்னேஷும் அருண்குமாரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து கோபி விக்னேஷ் ஆர் எஸ் புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகன் தினேஷ் (22) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாகவுள்ள கோபி, விக்கி, சந்தோஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.