
ஒடிசா மாநிலம் பாலிஸ்வர் பகுதியை சேர்ந்தவர் பர்புல்லா கண்டா என்பவரை மகன் துர்கா சரண் கண்டா (32). இவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமையல் மாஸ்டர் ஆக கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ஆர்த்தி கண்டா(24) என்ற மனைவியும் ரியா கண்டா(4) என்ற மகளும் உள்ளனர.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு துர்கா சரண் கண்டா தனது மனைவி மற்றும் மகளை கோவைக்கு அழைத்து வந்து தனியாக வீடு எடுத்த வசித்து வந்தார் .இந்நிலையில் நேற்று முன்தினம் துர்கா சரண் கண்டா வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்தது. வீட்டில் இருந்த மனைவி மற்றும் மகளை காணவில்லை .அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பல இடங்களில் தேடியும் மனைவி மகள் கிடைக்காததால் துர்கா சரண் கண்டா பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார் .போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.