
கோவை,அகம் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் மற்றும் கற்பகம் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச சிறப்பு மருத்துவ முகாம் கோவை காந்தி பார்க் மாரண்ண கவுடர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது . சங்கத்தின் தலைவர் திருக்குமார் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் கார்த்திகேயன்், பொருளாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். இம்மருத்துவ முகாமை கோவை மாநகராட்சி துணைமேயர் வெற்றிசெல்வன், நகரமைப்பு குழு தலைவர் சோமு (எ) சந்தோஷ், 72 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக் கே. செல்வராஜ் ஆகியோர் முகாமை துவங்கி வைத்தனர் . இந்த மருத்துவ முகாமில் தமி ழ்நாடு மொத்த மருந்து விற்பனை தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சுவாமிநாதன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவிச்சந்திரன், வழக்கறிஞர் விஜய்ஆனந்த் ஜெயராஜ், ஆடிட்டர் செந்தில்குமார், அன்னை சீனிவாசன் , விகாஸ் செயின் தவிவேக் , தாய் தமிழ் அகடாமி நிறுவனர் பால்ராசு, பாலாமணி, சமூக ஆர்வலர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இம்மருத்துவ முகாமில் கண் சிகிச்சை,பொது மருத்துவம், இருதயப் பரிசோதனை ஆர்த்தோ ஆகிய சிகிச்சைக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. 500 நபர் கலந்து கொண்டனர் 300 நபர்கள் பரிசோதனை செய்து கொண்டனர். சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வெள்ளிங்கிரி நன்றி கூறினார் .நிகழ்ச்சி ஏற்பாடுகளை அகம் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் கோவை மாநகர், புறநகர் நிர்வாகிகள் மேட்டுப்பாளையம் நிர்வாகிகள், மதுரை நிர்வாகிகள், மற்றும் மகளிரணியினர், உறுப்பினர்கள் செய்திருந்தனர்..