கோவை
கோவை சாய்பாபா காலனி அடுத்த சின்னம்மாள் வீதி பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ். இவரது மகன் விகாஸ் (32). இவர் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து சாப்ட்வேர் நிறுவனங்களும் வீட்டிலிருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்தியதால் விகாசும் கடந்த இரண்டு வருடங்களாக வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வருகிறார். மேலும் அதிக அளவில் இரவு செட்டு பணிகளை அவருக்கு இருக்கும் மேலும் விகாஷுக்கு இரவு பணியின் போது நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது வழக்கம். இன்னல்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த பிஸ்கட்டுக்கு பதிலாக எலிகளை கொல்ல பயன்படுத்தும் பிஸ்கட்டை தெரியாமல் விகாஷ் சாப்பிட்டு விட்டார் .இதை அடுத்து அவர் தொடர்ந்து வாந்தி எடுத்தபடி வீட்டிலிருந்தார். இதை பார்த்த அவரது குடும்பத்தார் விகாஷை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் விகாஷ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.