கோவை,
கோவை கொங்கு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 90%க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்ற 400 மாணவ மாணவியர்களை கௌரவப்படுத்தும் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கோவை கொங்கு நண்பர்கள் சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் நந்தகுமார் வரவேற்றார்.இணைச் செயலாளர் லோகநாதன் விழா அறிமுக உரை நிகழ்த்தினார். கௌரவ தலைவர்கள் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி பாரி ஐபிஎஸ், ராம்ராஜ் காட்டன் நிறுவன உரிமையாளர் நாகராஜன், ஹிந்துஸ்தான் கல்விக் குழும செயலாளர் சரஸ்வதி கண்ணையன், திருப்பூர் டாலர் குரூப்ஸ் நிறுவனத் தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து பரிசுகள் வழங்கினர்.இப்பாராட்டு விழாவில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசு, சான்றிதழ், ரொக்கப்பரிசாக ரூ.10,000. ரூ.7500 மற்றும் ரூ.5000 வழங்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ். நினைவு பரிசு. ரொக்க பரிசாக ரூ.7500. ரூ.5000. ரூ.3000 வழங்கப்பட்டது. விழாவில் 400 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கோவை கொங்கு நண்பர்கள் சங்க செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவை கொங்கு நண்பர்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.