அமெரிக்க யோகா நிறுவனத்துடன் கோவை ஓசோன் யோகா மையம் ஒப்பந்தம்

 

கோவையை சேர்ந்த பத்மஸ்ரீ யோகா பாட்டி நானம்மாள் குழுமத்தின் ஓசோன் யோகா சென்டரும் அமெரிக்காவை சேர்ந்த சுப்ரா யோகா பள்ளியும் இணைந்து பல லட்சம் மாணவர்களை யோகா ஆசிரியர்களாக ஆக்கும் பணியை மேற்கொண்டுள்ளார்கள்.இது குறித்து சுப்ரா ஸ்கூல் யோகாவின் நிறுவனர் சுப்பிரமணியம் மற்றும் ஓசோன் யோகா மைய நிறுவனர் டாக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர் .அப்போது, அமெரிக்காவில் சுப்ரா ஸ்கூல் யோகா சிகாகோவில் பதிவு பெற்ற ஓர் பள்ளியாகும். யோகா அலயன்ஸால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் சர்வதேச யோகா டீச்சர்ஸ் டிரெயினிங் ஸ்கூல்ஆகும்.இந்த பள்ளியில் யோகா கற்று ஆர்.ஓய்.டி. சர்வதேசசான்றிதழ் பெற்றவர்கள் உலகம் முழுவதும் சென்று யோகா பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களாக தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.கொரோனா தொற்று பரவலுக்கு பின் ‘யோகா’ ஆசிரியர்களின் தேவை உலகளவில் அதிகரித்துள்ளது.

எங்களது நோக்கம் என்னவென்றால் மாணவர்களுக்கு யோகா பயிற்சி கொடுத்து யோகா ஆசிரியர் ஆக்கிவிட்டால் அவர்கள் வழிதவறி தப்பான பாதையில் செல்ல மாட்டார்கள், பள்ளியிலும் குடும்பத்திலும் ஒழுக்கமாக இருப்பார்கள். ஆன் லைனில் சம்பாதித்து தனக்கும், தனது குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவியாக இருப்பார்கள். இந்த நோய் தீர்க்கும் யோகக் கல்வியை கற்பதன் மூலம் மாணவர்களும் அவர்கள்  குடும்பமும் மருத்துவமனைக்கு செல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.மாணவர்கள் யோகா

அலையன்ஸ் ஆர்.ஓய்.டி. சர்வதேச சான்றிதழ் பெற்றபின் உலக நாடுகளுக்கு சென்று  நோய் தீர்க்கும்  கல்வியை கற்பிக்கலாம்.யோகா கற்பதன் மூலம் மாணவர்களின்

ஞாபக சக்தி கூடும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.தற்போது பத்மஸ்ரீ யோகா பாட்டி நானம்மாள் குழுமத்தின் ஓசோன் யோகா சென்டரும் அமெரிக்காவை சேர்ந்த சுப்ரா யோகா பள்ளியும் இணைந்து பல லட்சம் மாணவர்களை யோகா ஆசிரியர்களாக ஆக்கும் பணியை துவக்கி உள்ளோம் என்றும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.