கோவையிலிருந்து முதல்முறையாக உலக பிட்னஸ் போட்டியில் பங்கேற்று மிஸ்டர் யுனிவர்ஸ் மூன்றாம் இடம் பெற்ற கோவையைச் சேர்ந்த தர்மதுரைக்கு விமான நிலையத்தில் தேசியக் கொடியுடன் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் என்பவரின் மகன் தர்மதுரை(31). இவரது தந்தை வெங்கடேசன் சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். தர்மதுரை கடந்த மூன்று ஆண்டுகளாக மிஸ்டர் கோவை பிட்னஸ் போட்டியில் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து வென்றுள்ளார்.
இதை அடுத்து உலக உடல் கட்டமைப்பு ஃபெடரேஷன் மூலம் நடத்தப்பட்ட உலக ஆணழகன் சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து நாட்டில் உள்ள கிராண்ட் சென்டர் பாயிண்ட் டெர்மினல் 21 என்னும் நகரத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் கடந்த 16, 17 தேதிகளில் தேதிகளில் நடைபெற்றது. 25க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 1000 கக்கும் மேற்பட்டோர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர் . இந்தியா சார்பில் கோவையில் இருந்து கலந்து கொண்ட தர்மதுரை மூன்றாம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற தர்மதுரைக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த தர்மதுரைக்கு கோவை விமான நிலையத்தில் இன்று காலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் தர்மதுரைக்கு தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பாராட்டு தெரிவித்தார். வரவேற்பில்்பயிற்சியாளர் பிரேம், தர்மதுரையின் தந்தை வெங்கடேசன் தாயார் மதி முகம் மற்றும் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த தர்மதுரை போட்டி மிகவும் கடினமாக இருந்தது. கடைசி நேரத்தில் உடல் எடையை இரண்டு நாளில் ஒரு கிலோ வரை அதிகரித்து கலந்து கொண்டேன். கோவையிில் இருந்து கலந்து கொண்ட ஒரே வீரர் என்பது எனக்கு கிடைத்த பெருமை என்றார்.வேர்ல்ட் ஃபிட்னஸ் பெடரேஷன் தமிழக தலைவர் மோகன், மேனேஜர் ஆல்பர்ட் ஆகியோர் என்னை உற்சாகப்படுத்தி கலந்து கொள்ள செய்தனர். அடுத்த கட்டமாக வியட்நாமில் நடைபெறும் உலக அளவிலான போட்டியில் கலந்து கொண்டு நிச்சயம் பரிசை வென்று கோவைக்கு பெருமை சேர்ப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.