கோவை,
கோவை மாவட்டத்தின் சுல்தான்பேட் ஒன்றியத்தைச் சேர்ந்த செலக்கரிச்சல் கிராமத்தில் ‘ரூரல் ரைசிங்’ – என்ற பெயரில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தை யுனைடட் வே ஆஃப் பெங்களூரு என்ற நிறுவனத்துடன் இணைந்து அல்ஸ்டாம் தொடங்கியது.
மத்திய அரசின் மிஷன் அந்த்யோதயா ஆய்வில் கிராமத்தின் வளர்ச்சித் தேவைகளாக கண்டறியப்பட்ட அம்சங்களின் அடிப்படையில் இந்த கிராமப் பஞ்சாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சித் தேவைகளை பூர்த்தி செய்வதே இத்திட்டத்தின் குறிக்கோளாகும். திட்டத்தின் கீழ் இரு அங்கன்வாடி மையங்களில் புதிய வசதிகளும், உட்கட்டமைப்பு பணிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. குழந்தைகளுக்கு உகந்தவாறு இந்த மையங்கள் நல்ல சூழலில் இருப்பதையும், பாதுகாப்பானதாக இவைகளை மாற்றுவதும் இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. இக்கிராமத்தில் உள்ள ஒரு அரசு ஆரம்பப் பள்ளிக்கு மதிய உணவு சமையலறை கட்டித் தரப்பட்டிருப்பதுடன், ஒரு கழிப்பறையும் புதுப்பிக்கப்பட்டி ருக்கிறது. இதனால் 150 பள்ளி மாணவர்களும் பயனடைவார்கள்.
இவ்வளாகத்தை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வில் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. நவமணி, மாவட்ட பஞ்சாயத்தின் ஊரக மேம்பாட்டு முகமையின் செயல்திட்ட இயக்குனர் கே. கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்சி முத்துராஜா, சுப்புலட்சுமி, உதவி கல்வி அதிகாரி பிரான்சிஸ் சார்லஸ், கூட்டுறவு சங்கத் தலைவர் கருப்பசாமி, மண்டல உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தி, குழந்தை வளர்ச்சி செயல்திட்ட அதிகாரி சல்மா, பஞ்சாயத்து தலைவர் மரகதவடிவ கருப்பசாமி, அல்ஸ்டாம் கோயம்புத்தூர் ஆலையின் நிர்வாக இயக்குனர் எஸ். செல்வகுமார் மற்றும் யுனைடட் வே ஆஃப் பெங்களூருவின் செயல்திட்ட இயக்குனர் ஸ்ரீராம் அனந்தநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.